இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை..!

 
1 1

நவராத்திரி திருவிழா தொடங்கப்பட்டுள்ளதையொட்டி போபாலில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஹபூரில் நேற்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை அசைவ உணவுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் பிறப்பித்துள்ள உத்தரவில், ‛‛அக்டோபர் 2ம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அசைவ ஹோட்டல், ரெஸ்டாரண்டுகளை மூட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய பிரதேச மாநிலதம் போபாலிலும் நேற்று முதல் மீன், முட்டை, சிக்கன், மட்டன் உள்ளிட்டவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை போபால் எஸ்டிஎம் (Sub Divisional Magistrate ) திவ்யா படேல் பிறப்பித்துள்ளார். இதுபற்றி அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‛‛ செப்டம்பர் 22ம் தேதி நவராத்திரி பண்டிகை தொடங்கியது. இதனால் செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.