நூல் விலை உயர்வு : 4வது நாளை எட்டியது பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்...

 
நூல் விலை உயர்வு : 4வது நாளை எட்டியது பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்...

நூல் விலை அதிகரித்து வருவதைக் கண்டித்து, பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 4வது நளை எட்டியுள்ளது.  

நாளுக்கு நாள் பஞ்சு  மற்றும்  நூல் விலை வின்னை முட்டும் அளவிற்கு எகிறி வருகிறது.  இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி, காடா துணி உற்பத்தியாளர்கள் என நூல் மற்றும் துணி சாந்த தொழில்களில் ஈடுபட்டு வரும்  உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில்  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த, மருத்துவத்திற்கு பயன்படும்   பேண்டேஜ்  துணி உற்பத்தியாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

நூல் விலை உயர்வு : 4வது நாளை எட்டியது பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்...

நூல் விலை உயர்வால் வருவாய் இழக்கும் தொழில் நிறுவனங்களால், பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  நூல் விலை உயர்வைக் கண்டித்து  கடந்த  25 ஆம் தேதி) முதல் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர்.  அதேபோல் விசைத்தறி கூடங்கள், சைசிங் பேக்டரிகள் மற்றும் பேண்டேஜ் நிறுவன தொழிற்சாலைகள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டிருந்தது.  

நூல் விலை உயர்வு : 4வது நாளை எட்டியது பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்...

அதன்படி கடந்த 25 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள  பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் போராட்டம் இன்று 4 வது நாளை எட்டியிருக்கிறது.  சந்தையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நூல் விலையால்   மருத்துவ பேண்டேஜ் துணி உற்பத்தி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த 7 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆகையால்  மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.