"பங்காரு அடிகளார் இழப்பென்பது மெய்யியல் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு" - சீமான்

 
seeman

கருவறைக்குள் பெண்கள் நுழையக்கூடாது, வழிபாடு நடத்தக்கூடாது என்ற மூட நம்பிக்கைகளை தகர்த்தவர் பங்காரு அடிகளார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் அருளாளர் ஐயா பங்காரு அடிகளார் அவர்கள்  மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். 

tn

கருவறைக்குள் பெண்கள் நுழையக்கூடாது, வழிபாடு நடத்தக்கூடாது என்ற மூட நம்பிக்கைகளை தகர்த்து பெருமளவில் பெண்கள் வழிபாட நடத்த வழிவகுத்த சமய புரட்சியாளர். சிறு சிறு வழிபடு நம்பிக்கைகள்  மூலம் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த  இறை வழிபாட்டை  எளிமைப்படுத்தி ஈந்த மெய்யியல் பேரறிஞர். 

அறக்கட்டளை பல  நிறுவி  பசிப்பிணியும், உடற்பிணியும் போக்கி ஆதரவற்ற மக்களுக்கு ஆற்றும் தொண்டே ஆண்டவனுக்கு ஆற்றும் அருட்தொண்டு  என்பதை உணர்த்தி அடியவர்களையும் பின்பற்றச் செய்த  பெருந்தொகை. 


ஐயா அவர்களின் இழப்பென்பது  மெய்யியல் துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும். அருட்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள பல லட்சக்கணக்கான அடியவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். அருட்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று குறிப்பிட்டுள்ளார்.