தமிழ்நாடு என்றும் ஆன்மிக மண் என்பதை நிரூபித்தவர் ஸ்ரீபங்காரு அடிகளார் - வானதி சீனிவாசன்

 
vanathi srinivasan

பங்காரு அடிகளார் ஆன்மிகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் மேல்மருவத்தூர் ஸ்ரீபங்காரு அடிகளார் மறைவு செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர், பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

முற்போக்கு, மதச்சார்பின்மை என்ற பெயரில் நாத்திக சக்திகளின் கரங்கள் ஓங்கியிருந்த தமிழகத்தில், இந்து மதத்தையும், தமிழ் கலாசாரத்தையும் பேணிக் காத்ததில் ஸ்ரீபங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு பெரும் பங்குண்டு. பெண்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் சமூகத்தில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுதது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடங்களில் பெண்கள் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய முடியும் நிலையை உருவாக்கினார்.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண்கள் சிவப்பு சேலை அணிந்து மேல்மருவத்தூருக்கு செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். 'சிவப்பு' என்றாலே 'கம்யூனிஸ்ட்' என்ற நிலையை மாற்றி 'சிவப்பு' என்றால் 'ஆதிபராசக்தி' என்று மாற்றியவர்.

tn

ஆன்மிகத்தில் பெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஸ்ரீபங்காரு அடிகளார். தமிழ்நாடு என்றும் 'ஆன்மிக மண்' என்பதை நிரூபித்தவர். 'ஆண்' ஆக பிறந்தாலும் தனது செயல்பாடுகளால், பெண்களுக்கும் 'அம்மா' ஆனவர். அவரது மறைவு ஆன்மிகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.