இந்த மாதம் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை... முக்கிய அறிவிப்பு இதோ!!

 
bank

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் இம்மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது என்பது குறைந்துள்ளது. ஷாப்பிங், பரிவர்த்தனை என அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் சில பணிகள் வங்கிகளுக்கு சென்று செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.

bank

இந்த சூழ்நிலையில் இந்த மாதம் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகள் வழக்கம்போல் மூடப்படும்.  இருப்பினும் வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.  ஒரு மாநிலத்திற்கு ஏற்றபடி மாறுபடும். ஆனால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் மூடப்படுகிறது. இதனால் முன்கூட்டியே வங்கிகளுக்கு செல்லும் பணிகள் இருக்கும் பட்சத்தில் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு  வாடிக்கையாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் :

bank

 அக் 1 - வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு
 அக் 2 - மகாத்மா காந்தி ஜெயந்தி (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)
அக் 3 - ஞாயிறுக்கிழமை
அக் 6 - மஹாளய அமாவாஸ்யே (அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தா மாநிலங்களில் விடுமுறை)
 அக் 9 - இரண்டாவது சனிக்கிழமை
அக்10 - ஞாயிறுக்கிழமை
அக்12 - துர்கா பூஜை (அகர்தலா, கொல்கத்தா)
அக் 13 - மகா அஷ்டமி (அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மாநிலங்களில் விடுமுறை)
அக்14 - துர்கா பூஜை/தசரா/ஆயுத பூஜை (அகர்தலா,
பெங்களூரு, தமிழ்நாடு, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி,
கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை)
அக் 15 - விஜய தசமி (இம்பால் மற்றும் சிம்லாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)
 அக்ர் 17 - ஞாயிறுக்கிழமை
அக் 18 - கதி பிஹு (கவுகாத்தி)
 அக் 19 - நபிகள் நாயகம் பிறந்த நாள் (அகமதாபாத்,
பெலாப்பூர், போபால், தமிழ்நாடு, டேராடூன், ஐதராபாத், இம்பால், ஜம்மு,
கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர்,
ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்)
அக் 20 - மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள்/லட்சுமி பூஜை/ஐடி-இ-மிலத் (அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா)
அக் 22 - வெள்ளிக்கிழமை ஈத்-இ-மீலாத்-உல்-நபி (ஜம்மு, ஸ்ரீநகர்)
அக் 23 - நான்காவது சனிக்கிழமை
அக்24 - ஞாயிறுக்கிழமை
அக் 31 - ஞாயிறுக்கிழமை.

என 18 நாட்கள் வங்கிகள் செயல்படாது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் இந்த அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 18  நாட்கள் விடுமுறை நாட்கள் வருவது குறிப்பிடத்தக்கது.