போதையில் ஓடும் பேருந்தில் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்- 3 பேர் கைது
கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமைத்தில் இரவு (16-9- 24 )இரவு 9-30 மணிக்கு தஞ்சாவூருக்கு புறப்பட்ட (செந்தில்)தனியார் பேருந்தில் மது போதையில் ஏறிய 3 பேர், பெண்கள் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து தகாத வார்த்தைகள் பேசி உள்ளனர். இதையடுத்து அவர்களை நடத்துனர் விகாஸ் (23) வேறு இருக்கைக்கு சென்று அமருமாறு தெரிவித்துள்ளார். அப்போது இடத்தை மாற்றி அமர முடியாது என நடத்துனரிடம் மது போதையில் இருந்த வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.
போதையில் ஓடும் பேருந்தில் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்... பரபரப்பு வீடியோ#thanjavur #BusConductor #viral #reach #mnadunews pic.twitter.com/5tNgHgxpZz
— M Nadu Tv (@mnadutv) September 18, 2024
உடனே நடத்துனர் பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த வாலிபர்களில் ஒருவர் எங்கள் மீது கை வைக்கிறாயா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி நடத்துனரை மூன்று பேர் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நடத்துனர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் நடத்துனர் விகாஸ் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்துனரை போதையில் தாக்கிய நான்கு பேரில் உதயச்சந்திரன் -( 33),ஜன சந்திரன் - (30),தமிழ் நேசன் - (29) ஆகியமூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மூவரும் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.