குற்றாலம் போறீங்களா?- அப்ப இதை தெரிஞ்சுகிட்டு போங்க...
May 24, 2025, 12:35 IST1748070305743
பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓரளவு பெய்த மழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வர துவங்கியுள்ளது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பாதுகாப்பு கருதி இன்று காலை அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை இல்லாததால் இந்த தடை விலகிக் கொள்ளப்பட்டது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தற்போது சீரான தண்ணீர் வரத்து உள்ளது. அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


