குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க 3வது நாளாக தடை

 
kutralam

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்நிலைகளில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் தண்ணீர்  ஆர்ப்பரித்து கொட்டுகிறது.