வௌவால்களை வறுத்து, சில்லி சிக்கன் என விற்பனை

 
ச் ச்

வௌவால்களை வறுத்து, சில்லி சிக்கன் என விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ச்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை வனத்தில் பழந்தின்னி வெளவால்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி சில்லி சிக்கன் என வறுத்து விற்பனை செய்த இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் கமல் மற்றும் செல்வம்.  பழந்தின்னி வெளவால்கள் நிபா, எபலோ உள்ளிட்ட வைரஸ்களை கொண்டிருக்கும். வெளவால்களுக்கு இந்த வைரசால் பிரச்சனை இல்லை. ஆனால் மனிதர்களுக்கு ஆபத்து எனக் கூறப்படுகிறது.