பவதாரிணியின் திடீர் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
Jan 26, 2024, 13:29 IST1706255977131
பாடகி பவதாரிணி மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானர் என்கிற செய்தி ஆழ்ந்த வருத்தத்தைத் தருவதாக உள்ளது;
காலத்தால் அழியாத பல பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்த பவதாரணி இனிமையான தனது தனித்துவம் வாய்ந்த குரலால் தனித்து நின்றவர்;
இசையமைப்பாளராகவும் பரிணமித்த அவர் தனது தந்தையைப் போலவே இசை உலகில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்க வல்லவராகத் திகழ்ந்தார்;
அவரது திடீர் இழப்பு இசைத் துறையில் ஈடுசெய்ய முடியாத ஒன்று;
அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.