அடுத்த மாதம் முதல் மீண்டும் பீச் - வேளச்சேரி ரயில்!

 
train

அடுத்த மாதம் முதல் மீண்டும் சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

இன்று முதல் அனைத்து புறநகர் ரயில்களும் இயங்கும்! - மின்னம்பலம்


சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் தடத்தில் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. எழும்பூர் - கடற்கரை இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் நவம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் 
வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2.30 லட்சம் நபர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.  இந்த வழித்தடத்தில் உள்ள மந்தவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உட்பட அனைத்து ரயில் நிலையங்கள் மேம்படுத்தபடவுள்ளது.