இன்று முதல் பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் எண் மாற்றம்..!

 
1 1
பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய எண்-16377 (பழைய எண்-12677) ஆகவும், மேலும், எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய எண்-16378 (பழைய எண்-12678) ஆகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில்களின் புதிய எண்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.