திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்..!

 
1

இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சித்ரா பவுர்ணமி வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24-ந் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது.இதனால் 23-ந் தேதி முழுமையாக சித்ரா பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சித்ரா பவுர்ணமிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.