மக்களே உஷார்..! இந்த 3 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும்..!

 
1 1

தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கான மழை எச்சரிக்கை குறித்த விபரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
 

அதன்படி, இன்று (நவ.,26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 

நாளை (நவ.,27) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நவ.,28ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை கனமழை பெய்யும் என்றும், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.