வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

 
tn

பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

tn

மகாகவி பாரதியார் அவர்களின் 142 - வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!" எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்!

வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை! என்று குறிப்பிட்டுள்ளார்.