#BIG BREAKING : நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்..!

 
1

2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. இப்படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாகக் கைக்கோர்த்த நிலையில், தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக வேட்டையாடு விளையாடு உருவெடுத்தது.இப்படத்தில் சீரியல் கில்லர் மற்றும் சைக்கோ கொலையாளியாகக் கலக்கிய இருப்பார் நடிகர் டேனியல் பாலாஜி.

சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.