#BIG BREAKING : தவெக ஆட்சி அமைய ஐயூஎம்எல் கட்சியும் ஆதரவு..! பெரும்பான்மை 120 ஆக உயர்ந்தது..!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 34.92% வாக்குகள் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன.
அதிலும், விஜய் தான் போட்டியிட்டு வென்றுள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் தவெக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107- ஆக குறையும். பெரும்பான்மையை நிரூபிக்க 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி திமுகவுடனான 10 ஆண்டுக்கால கூட்டணியை முறித்து கொண்டு, தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவனிடம் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரடியாக பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு ஆதரவு என தகவல்கள் வெளியான நிலையில் ஆதரவு அளிக்கவில்லை என ஐ.யூ.எம் எல் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது.

