#BIG BREAKING : மேகதாது அணை - திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி..!
Nov 13, 2025, 13:12 IST1763019748224
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி.
தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்ட, திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.
தமிழகம், புதுச்சேரியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (நவ., 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உளர்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், இந்த அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


