#BIG BREAKING : கோவை கவுண்டம்பாளையம் கொள்ளைச் சம்பவம் - 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

 
1 1

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருடு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடினர்.


பின்னர் குளத்துபாளையம் பகுதியில், கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து திருடிய 56 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் அருகே வீடு ஒன்றில் பதுங்கி இருந்த போது போலீசார் சுற்றி வளைத்து காலில் சுட்டு பிடித்துள்ளனர். 3 பேர் தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.