#BIG BREAKING : பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார்..!
இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்' என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என இவர் அடைந்த பெருமைகள் ஏராளம்.
2013-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், இது தனக்கு தாமதமானது என்று நிராகரித்துவிட்டார் ஜானகி. 2016-ம் ஆண்டு தான் திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்து, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்த்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, இன்று (ஜனவரி 22) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முரளி கிருஷ்ணா அவருடைய தாயாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். அவர் நடிகராகவும், அவருடைய மனைவி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞராகவும் காணப்படுகின்றார்.
முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இசை உலகில் பெரும் பங்களிப்பு செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு, இசை ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


