#BIG BREAKING: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்..!!
Updated: Nov 26, 2025, 11:49 IST1764137991214
அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்து உத்தரவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி மதுரையில் நடந்த தேவர் குரு பூஜை நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பங்கேற்றார் செங்கோட்டையன். இதனையடுத்து, கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி..
இதற்கிடையே, செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார்.


