#BIG NEWS : வியட்நாம் படகு விபத்து: இந்திய சுற்றுலாப் பயணிகள் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

 
1

வியட்நாம் கியூக் தீவு அருகே உள்ள கடல் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இந்திய சுற்றுலாப் பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; பல இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று வியட்நாமின் பு கியூக் தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த துல்லியமான விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. மேலும் தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய தூதரக ஜெனரல் அலுவலகத்திலும், ஹனோயில் உள்ள தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.