#BIG NEWS : காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு செக்..!

 
1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருவாய்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்பொழுது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி நிலுவைத் தொகையை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருவாய்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 

வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய "நிலுவைத் தொகையில்" பழைய பான் கார்டைப் பயன்படுத்துவதில் "முரண்பாடுகளுக்கு" அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய அபராதம் மற்றும் வட்டி ஆகியவை அடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. 

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக அரசு வரி தீவிரவாதத்தை நடத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமைக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  11 கோடி ரூபாய் வரிபாக்கியை செலுத்துமாறு அந்த நோட்டீஸில் வருமான வரித்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.