#BIG NEWS : இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு..!
Mar 27, 2024, 18:36 IST1711544795312
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில், அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு வழிகாட்டுதலின்படி, இடைத்தேர்தல் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.