#BIG NEWS : இந்தியாவை சூழும் இருள்.. காலையிலேயே குழம்பிய பொதுமக்கள்..!
பூமியில் பல ஆயிரம் எரிமலைகள் இருக்கின்றன. சில எரிமலைகள் ஆக்டிவாக எரிமலை பிழம்பைக் கக்கும்.. அதேநேரம் பல நூறு எரிமலைகள் எப்போதும் அமைதியாகவே இருக்கும். அப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை ஒன்று தான் இப்போது வெடித்துச் சிதறியுள்ளது.
எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இந்த ஹெய்லி கூப்பி எரிமலை, சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்துள்ளது. இத்தனை காலத்திற்குப் பிறகு அந்த எரிமலை வெடித்துள்ளதால் சாம்பல் மேகங்கள் உலகெங்கும் பரவி வருகிறது.
மணிக்கு 100-120 கி.மீ வேகத்தில் வீசும் காற்றினால் இந்த எரிமலைச் சாம்பல் மேகங்கள் இந்தியா உட்பட பல நாடுகளுக்குப் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எத்தியோப்பியாவின் அஃபார் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்துச் சிதறியது. அந்த சாம்பல் கிழக்கு நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இது நேற்று இரவு டெல்லியை அடைந்துள்ளது. இந்த எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி காற்று மாசுடன் போராடி வரும் நிலையில், இந்த எரிமலை சாம்பலும் டெல்லியை நேற்றிரவு அடைந்துள்ளது. இதன் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவை நோக்கி 100 - 120 KM வேகத்தில் வருகின்றன. எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும் எனவும், இரவு 7:30 மணிக்கு இந்தியாவை விட்டு விலகும் என்றும் IMD கணித்துள்ளது. புகை மண்டலம் காரணமாக ஏற்கெனவே கேரளாவில் இருந்து துபாய் சென்ற விமானம் அகமதாபாத்திற்கு திரும்பி விடப்பட்டது.


