#BIG NEWS : ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு..!
Aug 29, 2025, 15:54 IST1756463052068
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கம் ரூ.75,760ஆக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ,65 அதிகரித்து ரூ.9,470க்கு விற்பனையாகி வருகிறது.
மதியத்துக்கு மேல் பவுனுக்கு மீண்டும் ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.76, 280 ஆக விற்பனை ஆகிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, சுபமுகூர்த்த தினங்களினால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 4 நாட்களில் மட்டும் ரூ.1,840 உயர்ந்துள்ளது.


