#BIG NEWS : தமிழக பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி…!

 
1 1

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பொருட்டு பள்ளி பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு குழுக்களில் உள்ள 32 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சுமையை மேலும் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.