#BIG NEWS : 2026 நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

 
1 1

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.

இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3-ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை நீட் நுழைவுத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் மே 3-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.