#BIG NEWS : பெரம்பலூரில் விஜய் பிரசாரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரம் மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி வருகிற 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை அவர் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.
முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வருகிற 13 ஆம் தேதி முதல் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சியில் தனது பிரச்சாரத்தை 13 ஆம் தேதி தொடங்கும் த.வெ.க தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையிலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து டிசம்பர் மாதம் இறுதி வரை தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி பெரம்பலூரில் விஜய் பிரசாரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை எர்டா செய்தி வெளியாகியுள்ளது
பெரம்பலூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கவில்லை என காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
விஜய் பிரசாரம் குறித்து தவெக சார்பில் சரியான பதில் அளிக்கவில்லை எனவும் தவெகவினர் அலட்சியத்தால் அனுமதி அளிக்கவில்லை எனவும் காவல்துறை கூறியுள்ளது.
இதனால் திட்டமிட்டபடி விஜயின் சுற்றுப்பயணம் இருக்குமா ? இல்லை வேறு பாதையில் இயக்க திட்டமா என பல்வேறு கேள்விகள் தவெக தொண்டர்கள் கேட்டு வருகின்றனர்.


