#BIG NEWS : அதிமுகவில் இணைந்தார் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான பி.எம். மன்னன்..!

 
11

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையலாம் என தகவல் வெளியாகியது.

இந்நிலையில் சற்று முன் அவர் அதிமுகவில் இணைந்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு முக அழகிரி தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். மேலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை அரசியலில் பரபரப்பு திருப்பமாக அழகிரியின் ஆதரவாளர்கள் திமுகவின் பரம எதிரி அதிமுகவில் சேர்ந்துள்ளனர்.

குறிப்பாக 2006 முதல் 2011 வரை மதுரை மாநகராட்சி மேயராக இருந்த பிஎம் மன்னன் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து இருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் திமுக விசுவாசியாகவே தொடர்ந்த நிலையில் பலமுறை முயன்றும் திமுகவில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.இதனையடுத்தே மன்னன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement