#BIG NEWS: ரயில் பயணிகளுக்கு பேரதிர்ச்சி! ஜூன் 19 முதல் நெல்லை, நாகர்கோவில் ரயில்கள் ரத்து?

 
TRAIN CANCEL

திருநெல்வேலியில் நடைபெறும் ரயில்வே பணிகளால் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி திருச்சி - திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில்கள் திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட ரயில் நிலயங்களுக்கு செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்லாது.

செங்கோட்டை - ஈரோடு ரயில்களும் , தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில்களும் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பாலருவி எக்ஸ்பிரஸ், லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் திருநெல்வேலி, கோவில்பட்டி, வள்ளியூர், அம்பாசமுத்திரம் ரயில் நிலையங்களுக்கு செல்லாது என கூறப்பட்டுள்ளது. 

ஒருசில ரயில்கள் சிலநாட்களில் வழக்கம் போல இயங்கும் என்பதால் தென்மாவட்டங்கள் வழியாக செல்லும் பயணிகள் தாங்கள் பயணிக்க போகும் ரயில்களின் இயக்க நிலையை சரிபார்த்து விட்டு பயணிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.