#BIG NEWS : துள்ளுவதோ இளமை' பட நடிகர் அபிநய் காலமானார்..!
Nov 10, 2025, 11:31 IST1762754488071
துள்ளுவதோ இளமை' (2002) படத்தில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் அபிநய் ஆவார். இந்தத் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்த இவர், பின்னர் 'தாஸ்' (2005), 'ஜங்ஷன்' (2002) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். அவருக்கு, கேபிஒய் பாலா, நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் மருத்து செலவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்.
இந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


