#BIG NEWS : சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா டிடிவி தினகரன்..?
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி நிலையில், திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர அமித்ஷா முயற்சி எடுத்து வருகிறார்.
அதே வேளையில் டிடிவியை கூட்டணியில் சேர்க்க எடப்பாடியும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியானது. இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டேன் என டிடிவி திட்டவட்டமாக கூறி வந்தார். தவெகவுடன் கூட்டணி என பல இடங்களில் மறைமுகமாக உணர்த்தினார். இப்படி இருக்கும்போது டிடிவி எப்படி மீண்டும் அதிமுக கூட்டணியில் சேருவார் என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் வரும் ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில், நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
இந்தக் கூட்டத்திற்காக பாஜக வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள், தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. பேனரில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோருடன் தமிழக பாஜக தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. பாமகவின் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் படங்கள் பிரதானமாக உள்ளன.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன் ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
விஜயுடன் டிடிவி தினகரன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் புகைப்படத்துடன் டிடிவி தினகரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால், 2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக கட்சி இணையுமா..? இணையாதா என்பதை நாம் 23ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும்.


