#BIG NEWS : விஜய்க்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...10,000 பேர் தான் வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்?

 
Q Q
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடிகர் விஜய் தனது பரப்புரையை மேற்கொண்டார்.
அவர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விதிகளை மீறியதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரை காவல்துறை கைது செய்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின், இன்று கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், "41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கூட்ட நெரிசலில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்து தவெக தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.
"சம்பந்தப்பட்டவர்களை ஒருநபர் ஆணைய அறிக்கை வரும் வரையில் கைது செய்யக் கூடாது. விஜய் பரப்புரைக்கு வந்த கூட்டம் தானாக வந்த கூட்டம்; யாரும் வண்டி வைத்து அழைத்து வரப்படவில்லை.
விஜய் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று காவலர்களிடம் தெரிவித்தோம். நாங்கள் கட்சி நிர்வாகிகளைத் தடுக்கலாம், ஆனால் பொதுமக்களைத் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை" என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி,விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தவெக தரப்பு, "சம்பள நாள் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்தோம். உழவர் சந்தை பகுதியில் பொறியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்தோம். 23 ஆம் தேதி லைட்அவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி தருவதாக போலீஸ் கூறியது. நாங்கள் கட்சி காரர்களை தடுக்கலாம்; பொதுமக்களை தடுக்கமுடியாது.
நீங்கள் 10 ஆயிரம் என்று கணித்ததே தவறு. காலாண்டு விடுமுறை பள்ளி குழந்தைகள் எல்லாம் வருவார்கள்" என்றார். மேலும், "அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்குத் தெரியுமா? அவரிடம் இது சொல்லப்பட்டதா?" என்றும் கரூர் நீதிமன்றம் தவெக வழக்கறிஞர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது..
டாப் ஸ்டாரான விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என தெரியாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். விஜய் பரப்புரை என்றால் மாநாடு போலதான். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள் ..கூட்டம் அளவு கடந்து சென்றது தெரிந்தும் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.