#BIG NEWS : யாருக்கு மாம்பழம் சின்னம் கிடையாது..! டிவிஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்..!
பா.ம.க.வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக கட்சி யாருக்கு என்பதிலும், தலைவர் யார் என்பதிலும் இருவருக்கும் இடையே பெரிய போராட்டம் நடந்து வருகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கட்சியும், தலைமை பொறுப்பும் யாருக்கு என்பதில் இருவருக்கும் இடையே நடந்து வரும் போராட்டத்தால் அக்கட்சியின் தொண்டர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி ராமதாசை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கு விசாரணை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, "பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும்” என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், தமிழகத்தில் தேர்தல் நடந்தால் பாமகவில் யார் அங்கீகரிக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதில்,
எங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணியை தலைவராக ஏற்றோம். இதில் பிரச்சினை இருக்கிறது என்றால் அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.
பாமகவில் தலைமை பிரச்சினை நீடித்து வருகிறது.ராமதாஸ், அன்புமணி இடையில் பிரச்சினை தொடர்ந்தால் படிவம் ஏ, பி ஆகிய இரண்டிலும் இரு தரப்பும் கையெழுத்து போடுவதை ஏற்க இயலாது.
எனவே ராமதாஸ் தரப்பிற்கோ, அன்புமணி தரப்பிற்கோ மாம்பழம் சின்னத்தை ஒதுக்க முடியாது
எனவே வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கும் பாமகவிற்கு புதிய சின்னம் ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.


