நாமினேஷனில் இருந்து தப்பிக்க பிக் பாஸ் கொடுக்கும் அசத்தல் டாஸ்க்; துள்ளிகுதிக்கும் ஹவுஸ்மேட்ஸ்!

 
ttn

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற தேர்வு செய்யப்பட்டவர்கள் எவிக்சனில் இருந்து தப்பிக்க டாஸ்க் ஒன்று வழங்கப்படுவது போல இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். போட்டியாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடு, கோபம், சண்டை என இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது. நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக சிபி தேர்வு செய்யப்பட்டார். பிறகு, நாமினேஷன் நடைபெற்றது. பவானி ரெட்டி, சின்ன பொண்ணு, இசைவாணி, அக்ஷரா, அபிநய், பிரியங்கா, அபிஷேக், தாமரைச் செல்வி, ஐக்கி பெர்ரி உள்ளிட்டோர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

ttn

இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. புரோமோவின் ஆரம்பத்தில் இமான் அண்ணாச்சி டாஸ்க்கை வாசிக்கிறார். "இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க்  பஞ்சதந்திரம். இந்த பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. விலை மதிக்க முடியாத 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பாதுகாப்பது உங்கள் வேலை. ஒரு நாணயத்தை கைப்பற்றியவுடன் பிக்பாஸ் இடம் அதைத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறுகிறார்.

ttn

ஜக்கி பெர்ரி, மதுமிதா மற்றும் வருண் ஆகியோர் ஒவ்வொரு நாணயங்களை ஆட்டையைப் போட்டுவிட்டு பிக் பாஸிடம் அதை காண்பிக்கின்றனர். கடைசியாக, "இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்தால் இந்த வார நாமினேஷனில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியும்" என்று இமான் அண்ணாச்சி கூறுகிறார். இதைக்கேட்டவுடன் ஹவுஸ்மேட்ஸ் "வேற லெவல் பிக் பாஸ்" என்று கைதட்டும் படி புரோமோ முடிகிறது.