பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்- ஆக. 13 வரை எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

 
election commision election commision

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 13 காலை 10.00 மணி வரை எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் வரைவுப் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் / Bihar  SIR: Over 65 lakh voters not included in draft rolls

இது குறித்து தேர்தல் ஆணையம் 2025 ஆகஸ்ட் 13 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் மூலமாக எந்த உரிமை கோரலோ, ஆட்சேபமோ கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

நேரடியாக 17,665 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் பெறப்பட்டன. இவற்றில் 454 நேர்வுகள் 7 நாட்களுக்கு பின் பைசல் செய்யப்பட்டன.  18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 74,525 படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.