பீகார் தேர்தல் வெற்றி: "தமிழகத்திலும் இதுபோல வெற்றி பெறுவோம்!" - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை!
Nov 14, 2025, 12:59 IST1763105357699
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளரிடம் பேசியதாவது,
பீகார் தேர்தலில் 190 இடங்களுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது, இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள் என்பதை காட்டுகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தோடு பாஜக கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்து வந்தனர், அவர்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி பேசுவதில்லை, இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் இதுபோன்று பேசுவது வழக்கமாக வைத்துள்ளனர். தொடர்ந்து பாஜக பீகார் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது, போல தமிழகத்திலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்


