பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம்- தேசிய மருத்துவ ஆணையம்

 
doctors

11,12 ஆம் வகுப்பில் பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம், தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

How to Prepare for CBSE Biology Exam? - Careerindia

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. அதாவது மொழி பாடத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இந்நிலையில் தற்போது தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 11,12 ஆம் வகுப்பில் பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம், தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. பயாலஜி படிக்காதவர்கள் தனியாக உயிரியல் பாடம் படித்து தேர்வு எழுத வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முந்தைய விதிகளின்படி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் கூடுதல் பாடங்களை எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.