வேகமாக பரவும் பறவை காய்ச்சல் - கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு

 
tn

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 12 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ,சேலம், ஈரோடு,  நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.  கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

tn

அதேபோல் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் கோழி, வாத்து, முட்டை,  கோழி தீவனங்கள் கொண்டுவரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலியாக  கூடலூரில் உள்ள கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

tn

கோழி மற்றும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது.