வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டன் உடையும் அளவிற்கு அழுத்தமாக 'தாமரை'-ஐ அழுத்துங்கள்- அண்ணாமலை
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.,கே. நாகேந்திரனை ஆதரித்து, தமிழக பிஜேபி.,முன்னாள் தலைவர் அண்ணாமலை கராமநாதபுரம் அரண்மனை முன்பாக இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவில் பகுதியிலிருந்து வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை பகுதிவரை வேட்பாளர் நாகேந்திரனுடன் அண்ணாமலை திந்த ஜீப்பில் வாக்குகள் சேகரித்தார் .
பின்னர் அரண்மனை பகுதியில் உரையாற்றிய அண்ணாமலை, “தமிழக முதல்வர் ஒரு "பொம்மை" போலச் செயல்படுகிறார், "காலையில் ஒரு சாவி கொடுத்தால் டெல்லி டெல்லி என்றும், மற்றொரு சாவி கொடுத்தால் இந்தி இந்தி என்றும் அவர் பேசிக்கொண்டிருப்பார். இராமநாதபுர மண்ணிலிருந்துதான் எனது யாத்திரையைத் தொடங்கினேன். இன்று மீனவர்கள் ஓரளவுக்கு நிம்மதியாக மீன்பிடிக்கிறார்கள். இன்னும் சில பிரச்சினைகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், தேர்தல் வரும்போது மட்டும் முதல்வர் கச்சத்தீவு பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது கட்டுவது போல அவர் செயல்படுகிறார். இராமநாதபுரத்திற்கு மத்திய அரசு மருத்துவக் கல்லூரியைக் கொடுத்தது. ராமேஸ்வரத்தில் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தைக் கட்டிக் கொடுத்தது. ராமேஸ்வரத்தை ஒரு குப்பை நகரமாக திமுக அரசு மாற்றி வைத்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்கள் இல்லம் வந்து சேரவும், தமிழகத்தில் நிலவும் போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டன் உடையும் அளவிற்கு அழுத்தமாகத் தாமரைக்கு வாக்களித்து ஜி.பி.எஸ். நாகேந்திரனை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.


