டெல்லியில் பாஜக தலைவர்கள் முகாம்! அண்ணாமலை ஓரங்கட்டப்படுகிறாரா?
டெல்லியில் நடைபெறும் பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு செல்லாதது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் தமிழக பாஜக முக்கிய தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். அண்ணாமலையை தவிர்த்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், ஹெச். ராஜா, கேசவ விநாயகம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலவும் சிக்கல்கள் குறித்து தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அதிமுக கூட்டணி உடனான செயல்பாடு, உட்கட்சி பிரச்சனை உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு செல்லாதது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் இன்று டெல்லி செல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


