‘பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க’ என கொங்கு மொழியில் பேசினேன்: அண்ணாமலை
பிரதமரோடு கிண்டி ராஜ்பவனுக்கு வருகை தந்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “கேலோ இந்தியா நிகழ்ச்சியை வெற்றிகரமாக பிரதமர் துவங்கி வைத்தார். இந்த போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு பிரதமரின் மூன்று நாட்கள் பயணம் குறித்து விவரித்தார். காலையும் நாளை மறுநாளும் பிரதமர் முழுமையான இறைப்பணியில் ஈடுபட உள்ளார். 11 நாட்கள் விரதத்தில் கடைசி மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆன்மீக இடங்களுக்கு செல்கிறார். தமிழகத்தில் ராமர் சென்ற இடங்களுக்கு எல்லாம் சென்று விட்டு அயோத்தி செல்ல உள்ளார். இந்தாண்டில் பிரதமர் தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளார். இது தமிழக பாஜகவினருக்கு உற்சாகமான நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது.
கொங்கு பகுதிகளில் வழக்காடு மொழிகளை பேசுவதற்கு தவறாக சொல்கிறார்கள். அண்ணாமலையின் பேச்சு மீது பிரச்சனை இல்லை, அண்ணாமலை தான் பிரச்சனைகளாக பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கிறார்கள். மாட்டிற்கு பால் பீச்சுவதில் பல் படாமல் செய்வதையே சுட்டிக் காட்டினேன், இதில் என்ன தவறு உள்ளது? இதேபோன்று பதத்தை தொடர்ந்து நாளையும் பயன்படுத்துவேன். நான் தெளிவாக உணர்ந்து தான் பேசினேன். தவறாக புரிந்து கொண்டவர்கள் உளவியல் நிபுணர்களை சந்திக்க வேண்டும். எந்த வார்த்தை சொன்னாலும் வன்மத்தை கற்பிக்கிறார்கள். இதை நெறியாளர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். நான் வழக்காடு முறையைத்தான் பயன்படுத்துகிறேன். நான் பேசுவதில் தவறில்லை, பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் தவறு. எனவே நான் இது குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன்.
பிரதமர் இறைப் பணியில் இருப்பதால் கட்சிக்காக நேரம் கேட்கவில்லை. வருகிற ஜனவரி 25ஆம் தேதி 234 தொகுதிகளிலும் முதல் தலைமுறை வாக்காளர்களை வரவழைத்து பிரதமர் அவர்களிடம் பேசும் வழியில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பிரதமர் நல்ல அரசியல் எப்படி இருக்க வேண்டும்? தேர்தல் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து முதல் தலைமுறை வாக்காளர்களிடம் பேச உள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இது வளர்ச்சிக்கான களம், மற்ற மாநிலங்களில் எம்பிக்களை தக்க வைக்க வேண்டும். வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் எம்பிக்களை எடுக்க வேண்டும், வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். 2024 பாஜகவிற்கு மிக முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது” என்றார்.
நேற்றைய தினம் "நியூஸ் 18 தமிழ்நாடு" தொலைக்காட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்கள் நேர்காணல் நடத்தினார்.அது சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்களின் கேள்விகளை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை கொண்டும்,பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க போன்ற மாதிரியான கேள்விகளை கேட்டார் என மிகவும் தரம் தாழ்த்தி கூறியுள்ள சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.