ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய்... ஜல்லிக்கட்டு நடைபெற மோடிதான் காரணம்- அண்ணாமலை

 
Annamalai

சமூக விரோதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும்  ஊடகவியலாளர், நேசபிரபுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

Annamalai

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பல்லடம் பகுதியில் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் மருத்துவச் செலவு எதுவாக இருந்தாலும் பாஜக உடன் நிற்கும் கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற செயலை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெற மோடிதான் காரணம். ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தபோது முதல்வர் ஸ்டாலின் நிறைய பொய் பேசியுள்ளார். ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு என்றார் ஜெய்ராம் ரமேஷ். காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து காளையை நீக்கியது பாஜகதான். அயோத்தி ராமர் பற்றி ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு புரியும். அயோத்தி ராமர் பற்றி ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு புரியும். தெரிந்தமாதிரி பேசும் ஈபிஎஸ்க்கு புரியாது. அரசியல் வியாபாரியான திருமாவளவனுக்கு சமூகநீதி பற்றி பேச தகுதியில்லை” என்றார்.