3 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுதான் தலைவர் சேரில் அமர்ந்துள்ளேன்- அண்ணாமலை
திமுகவிற்கு "குற்றவாளிகள் முன்னேற்றக் கழகம்" என்று புது பெயர் வைத்து, 2021 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செய்த குற்றங்களை பட்டியலிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்க் கொலை விஷயத்தில் எதையும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் சிபிஐ விசாரணையை கேக்கலாம். ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் பாஜகவின் ஒரே நிலைப்பாடு சிபிஐ விசாரணை தான் வேண்டும். 2021ல் ஆட்சிக்கு வந்த பிறகு திமுக செய்த 112 மிகப்பெரிய குற்றங்கள் மட்டும் 18 பக்கங்களில் 3 அட்டவணையுடன் நாள் , பெயர் ,குற்றத்துடன் ஆதாரப்பூர்வமாக இருக்கும். டிஸ்பியை திட்டி அடித்தது, பெண் போலீஸ் இடுப்பை கிள்ளியது, கஞ்சா, கள்ளச்சசாராயம் விற்றது உட்பட அனைத்தும் இந்த 18 பக்கம் பிடிஎப்-ல் இருக்கும்.தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மற்ற மாநிலத்துடன் ஒப்பிட்டு தமிழக மக்களை முட்டாளாக்கி வருகிறது திமுக அரசு.
எனது வாழ்க்கையில் கடந்த மூன்று ஆண்டுகள்தான் எனக்கு கஷ்டமான காலம். கடந்த 3 ஆண்டுகள் எனக்கு கடினமானதாக இருந்தது. மூன்று ஆண்டுகளாக கஷ்டப்பட்டுதான் தலைவர் சேரில் அமர்ந்துள்ளேன். அரசியலுக்கு வருபவர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் ஆகிய மூன்றும் தேவை. இந்த அரசியலில் நாம் இருக்கவேண்டுமா? என பலமுறை யோசித்துள்ளேன். தமிழக பாஜக வில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர ஆலோசனை செய்து வருகின்றோம். நவம்பர், டிசம்பர் மாதத்தில் புது டீம் வருகிறது” என்றார்.