"பாஜக இல்லைனா அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருக்கும்.." அண்ணாமலை பரபரப்பு பேட்டி
பாஜக இல்லைனா அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பா.ஜ.க.வினர் இல்லை என்றால் அ.தி.மு.க.,வினர் எதிர்க்கட்ச அந்தஸ்தை இழந்திருப்பார்கள். அதிமுகவில் பல எம்.எல்.ஏக்கள் இருப்பதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது மட்டுமே நடந்து முடிந்த 2024 தேர்தலில் வெட்டவெளிச்சமாக தெரிந்துள்ளது. 76 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாம் இடமும் 3 சட்டமன்ற தொகுதிகளில் முதல் இடத்தை பிடித்து 18 சதவீதம் வாக்குகளை NDA கூட்டணி பெற்றுள்ளது. காமராஜர் ஆட்சிக்கு பின்னர் தமிழ்நாடு ஊழல் நிறைந்த மாநிலமாக உள்ளது. திராவிட கட்சிகள் ஒழிப்பே ஊழலிருந்து தமிழகம் விடுதலை பெறும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நாகரீகம் இல்லை. அரசியல் நாகரீகம் இல்லை. அதற்கு நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன் என்றால் நாகரீகமாக இருக்காது. அதிமுகவின் நிலைமையை பற்றி அக்கட்சி தலைவர்களே பரிதாப பட வேண்டும். அவர்கள் முதலில் அவர்களது முன்னேற்றத்திற்கு என்ன செய்யவேண்டும் என யோசிக்க வேண்டும்” என்றார்.