“கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை; கூட்டணி ஆட்சி தான்”- அண்ணாமலை பேட்டி

 
அண்ணாமலை அண்ணாமலை

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

aNnamalai

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒற்றைப் புள்ளியில் செயல்படுகிறோம். அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது. 2026 சட்டபேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும், கூட்டணி ஆட்சி தான் அமையும். நாமக்கல்லில் கிட்னி விற்பனை விவகாரம் குறித்து விரைந்து உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். கிட்னி திருடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

ஓரணியில் தமிழ்நாடு முகாமில் இணைந்தால் மட்டுமே ரூ.1,000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று பகிரமங்கமாக தெரிவித்து வலுக்கட்டாயமாக மக்களை கட்சியில் திமுகவினர் சேர்த்து வருகின்றனர். மாம்பழம் விற்பதுப கூவி, கூவி ஆட்களை அவர்கள் சேர்க்கின்றனர்” என்றார்.