“அரசியல் என வந்துவிட்டா இப்படிதான்... விஜய் எல்லாத்தையும் சமாளிக்கணும்”- அண்ணாமலை
திமுக எம்பி T.R.பாலு மீது இன்னொரு புதிய அவதூறு வழக்கு தொடர்வேன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DMK FILES வெளியிட்டது தொடர்பாக திமுக எம்.பி. TR பாலு தொடர்ந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “திமுக எம்பி T.R.பாலுவிடம் 3 மணிநேரம் குறுக்கு விசாரணை செய்தேன். மற்றொரு நாள் குறுக்கு விசாரணை தொடரும். திமுக எம்பி T.R.பாலு மீது இன்னொரு புதிய அவதூறு வழக்கு தொடர்வேன். அவதூறு வழக்கு தொடுக்குறேன் என்று சொல்லி ஒரு கேள்விக்கும் பதில் தெரியாமல் அவதூறு வழக்கு வாங்கிய ஒரே ஆள் TR பாலு மட்டும் தான். நான் டி.ஆர். பாலுவிடம் கேட்ட கேள்விக்கு, "தெரியாது, தெரியாது, தெரியாது" என பதிலளித்தார். திமுகவுக்கு நிச்சயமாக பாடம் புகட்டுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ரூ.2.50 கோடி கடன், விவசாய நிலத்தை வாங்கி இருக்கிறேன், அது பொதுவெளியில் இருக்கிறது.
Vijay has to deal with everything. அரசியல்னு வந்துட்டா சமாளிக்கணும். அரசியல் என வந்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களை இழுத்துப்பேசி முட்டுச்சந்தில் நிற்கவைக்கும் நிலை தான் உள்ளது. விஜய் அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இன்னும் பக்குவப்பட வேண்டும். அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கட்சியின் சார்பாக வருத்தம் தெரிவித்ததோடு நடிகரி த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய பிரச்சனை முடிந்ததாக நினைக்கின்றேன்” என்றார்.

