“உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலேஜ் இல்லையா?”- அண்ணாமலைக்கு அன்பில் மகேஸ் பதில்

 
ச் ச்

எங்கள் கூட்டணியில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர் என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

State government will determine the Education Policy for the State" -  Minister Anbil Mahesh interview | "மாநிலத்திற்கான கல்வி கொள்கையை மாநில அரசே  நிர்ணயிக்கும்" - அமைச்சர் அன்பில் ...

திருச்சியில் உள்ள தில்லையம்மன் படித்துறையில் மீன் வளத்துறை சார்பில் நடைபெற்ற காவிரி ஆற்றில் மீன் குஞ்சு இருப்பு செய்தல் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி ஆற்றுப்பகுதியில் மீன்களின் வளத்தை பேணி காக்கின்ற வகையில் , இயற்கையின் சார்ந்துள்ள இது போன்ற பணிகளில் நாங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம் என்பதால் இதனை செய்து வருகிறோம். டெட் தேர்வு விவகாரத்தில் ஆசிரிய சங்கத்தை சார்ந்தவர்களும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். பலர் பல்வேறு விதமான கருத்துக்களை கூறியுள்ளனர் கூட்டத்திற்கு பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம். மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரை கூட விட்டு விடாமல் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் என்ன பணி செய்ய முடியுமோ அதை செய்வோம். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே தமிழக முதல்வர் எடுக்கும் இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய நன்மை செய்தியாக அமையும் .

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த தி.மு.க-வினருக்கு அமைச்சர் அன்பில்  மகேஷ் அழைப்பு

உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலேட்ஜ் இல்லை என அண்ணாமலை கூறுகிறார். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான்.... இன்று இளைய சமுதாயம் சார்ந்து பல்வேறு விதத்தில் ஸ்கில் டெவலப்மெண்ட் (Skill Development) சார்ந்து துணை முதலமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளை பாருங்கள், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலர் சேர்ந்துள்ளனர் என்றால் அதற்கு அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பில் கொண்டு போய் அவர்களை அமர வைப்பதற்கு ஸ்கில் டெவலப்மெண்ட் தேவை . நான் முதல்வன் திட்டம் சார்ந்தெல்லாம் அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். திட்டம் கொண்டு வருவதில் மட்டுமல்ல. அதை தொடர்ந்து கண்காணித்து அதற்கு நல்ல ரிசல்ட் அவர் கொடுத்துள்ளார். அதேபோல் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நானும் கற்றுக்கொண்டு தான் உள்ளேன். நிறைய சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகின்ற வகையில் இன்னொரு இளைஞரை இது போல் இன்னொரு இளைஞர் சொல்வது வருத்தமளிக்கிறது. எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பது இன்னொரு 4 மாதத்தில் இது தெரிந்து விடும். நான் ஆரம்பத்தில் இருந்து கூறியது போல தான் 10 பேராக மட்டுமல்ல 10 ஆண்டுகளாகவே ஒரு வளமான, வலுவான கூட்டணியை நாங்கள் தொடர்ந்து கொண்டுள்ளோம். அதில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர். அதற்கான வழி வகையை தமிழக முதல்வர் விடமாட்டார்” என்றார்.