“ஒரு அரசியல் தலைவர் மாடுகளை வைத்து பேசுகிறார்” - சீமானை விமர்சித்த அண்ணாமலை
இன்று வருவோர், போவோர் எல்லாம் தலைவர் ஆகி விடுகின்றனர் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சுத்தானந்தா ஆசிரமத்தில் அரசியல், ஆளுமை தலைமைத்துவம் குறித்த பயிலரங்கில் உரையாற்றிய அண்ணாமலை, “வெள்ளை சட்டை போட்டு நான்கு ரீல்ஸ் போட்டால் தலைவராகி விடுகிறார். இன்று வருவோர், போவோர் எல்லாம் தலைவர் ஆகி விடுகின்றனர். தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தலைவர் மாடுகளை வைத்து பேசுகிறார். மாடுகளுக்கு வாக்குரிமை வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர் கூறியதை நான் சரி, தவறு என்று கூறவில்லை.
நமது வாக்காளர்கள் வித்தியாசமான வாக்காளர்கள். 40 சதவீத வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போடுவது என தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு தான் முடிவு செய்வார்கள். அதிகாரத்திற்கு வந்தாலும் செல்போனை ஒட்டுக் கேட்பது, பழி வாங்குவது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. எந்த பதவியும் ஒருநாள் இல்லாமல் போவது இயல்புதான். பழிவாங்கும் போக்கு அரசியல்வாதிக்கு இருக்கலாம், ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க கூடாது. நாம் சும்மா இருந்தாலும் நமக்கு அடைமொழி கொடுத்து போஸ்டர் அடித்து விடுகின்றனர்” என்றார்.


